உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா

dilshan fonseka
dilshan fonseka

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி பாகிஸ்தான் செல்லவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வழமையான உடற்பயிற்சி நிபுணரான (Trainer) நிக் லீ ஓய்வு எடுத்திருப்பதால், பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி நிபுணராக டில்சான் பொன்சேக்கா செயற்படவிருக்கின்றார்.

டில்சான் பொன்சேக்கா, இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஏற்கனவே இணைந்து கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் அமைந்திருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கான உடற்பயிற்சியகத்திலும் பணிபுரியும் டில்சான் பொன்சேக்கா, இலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான உடற்பயிற்சி நிபுணராக இருந்து வருவதோடு, பங்களாதேஷின் டாக்கா டைனமைட்ஸ் கழகம், றாகம கிரிக்கெட் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்ட அனுபவத்தையும் கொண்டிருக்கின்றார்.

டில்சான் பொன்சேக்கா பாகிஸ்தான் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த முக்கிய பங்களிப்பினை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.