இந்தியாவுடன் பிங் பந்தில் விளையாட விரும்பும் அவுஸ்ரேலிய அணி

pink ball
pink ball

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக கங்குலி நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பங்களாதேசுக்கெதிராக பல்- இரவு இடஸ்ட் போட்டினை நடாத்தியிருந்தார்.

இந்நிலையில் ஒவ்வொரு தொடரிலும் இந்தியா பிங்க் பந்தில் விளையாட வேண்டும் என கங்குலி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

இதனால் அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்யும் போது இந்தியா பல்- இரவு டெஸ்டில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவுடன் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளமையினால் அவ்விரண்டு போட்டிகளையும் பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளாக நடாத்துவதற்கு அவுஸ்ரேலிய கிரிக்கட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ இடம் வலியுறுத்த இருக்கிறது.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் டெஸ்ட் அணித்தலைவர் பிங் பந்தில் விளையாடுவதற்கு இந்திய அணித்தலைவர் விராட் கோலியிற்கு சவால் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.