விராட் கோலி அதிரடியில் இந்தியாவிற்கு இலகு வெற்றி

india
india

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சினை துவம்சம் செய்து 20 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 207 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஹெட்மையர் 56 ஓட்டங்களையும், எவின் லூயில் 40 ஓட்டங்களையும், பொலார்ட் 37 ஓட்டங்களையும், பிரன்டன் கிங் 31 ஓட்டங்களையும், கோல்டர் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் சாஹல் 2 விக்கட்டுக்களையும், வொஷிங்டன் சுந்தர், சாகர், ஜடேஜா தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர்.

208 எனும் கடின இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தது.

துடுப்பெடுத்தாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித்தலைவர் விராட் கோலி 94 ஓட்டங்களையும், ராகுல் 62 ஓட்டங்களையும்பேற்றுக்கொடுத்தனர்.

ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது,