மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ்!

202002091537559975 Tamil News Serena Williams Loses 1st Ever Fed Cup Singles Match SECVPF
202002091537559975 Tamil News Serena Williams Loses 1st Ever Fed Cup Singles Match SECVPF

வாய்வழி அறுவை சிகிச்சை செய்ததன் காரணத்தால் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சம்பியனான செரீனா கடந்த பெப்ரவரியில் மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாகாவிடம் தோல்வியடைந்தார்.

“நான் போட்டியிலிருந்து பின்வாங்குவதில் ஏமாற்றமடைகிறேன்” என்று மியாமி ஓபானை எட்டு முறை வென்ற 39 வயதான செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

மியாமி எனக்கு ஒரு சிறப்பு போட்டியாகும், ஏனெனில் இது எனது வீடு, இந்த ஆண்டு உண்மையான ரசிகர்களை என்னால் பார்க்க முடியாதது வருத்தமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.