ஐ பி எல் தொடரில் இருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

201812051246027310 mitchell marsh says we will better the batting performance SECVPF
201812051246027310 mitchell marsh says we will better the batting performance SECVPF

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ். இவர் ஐ பி எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த சீசனில் விளையாடும்போது கணுக்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒன்றிரண்டு போட்டியுடன் தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார். அவர் சிறப்பாக பந்து வீசியதுடன், பேட்டிங்கும் செய்தார்.

இந்த வருடத்திற்கான ஐ பி எல் போட்டிகள் வருகிற 9-ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக 8 அணி வீரர்களும் தங்களுடைய அணியுடன் இணைந்து வருகிறார்கள். ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஒட்டுமொத்த ஐ பி எல் போட்டிகளில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.