பொலார்ட் இல்லையெனில் எனது கிரிக்கட் வாழ்க்கை இல்லை

plard pooran 2
plard pooran 2

தனது கிரிக்கட் வாழ்க்கை நிறைவடைவதாக எண்ணியிருந்த நிலையில் பொலார்ட் தான் தனக்கு உதவி செய்ததாக நிக்கலஸ் பூரான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியதால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியானது.

தனது தடையினையடுத்து இந்திய தொடருக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது பற்றி தெரிவிக்கையில்;

பொலார்டு இல்லை என்றால் தனது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும் அவர் எனக்கு மூத்த சகோதரர் மாதிரி. அதேபோல் தந்தை போன்றவர். நான் கிரிக்கெட்டிற்கு திரும்பியதில் இருந்தே எனக்கு ஆதரவாக உள்ளார். அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனால் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பற்றி நன்றாக தெரியும். விளையாட்டிற்கு வெளியிலும் நாங்கள் சிறந்த நண்பர்கள். களத்தில் எவ்வாறு உற்சாகமாக துடுப்பெடுத்தாட வேண்டும் என எங்களுக்குத் தெரியும் என தெரித்தார்.