அவுஸ்ரேலியாவிடம் சரணடைந்தது நியுசிலாந்து !

download 52
download 52

சுற்றுலா நியுசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 26 திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்ஆரம்பமான இந்த போட்டியில்நனையசுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது

இதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 467 ஓட்டங்களைபெற்றுக்கொண்டது

தொடர்ந்து தனது முதல் இனின்ஸ்க்காக ஆடிய நியுசிலாந்து அணி 148 ஓட்டங்களையும் அனைத்து இலக்குகளையும் இழந்து பெற்றுக் கொண்டது .

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 168 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியது.

பதிலுக்கு 488 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியுசிலாந்து அணி 240 ஓட்டங்களை பெற்று 247 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள அவுஸ்ரேலிய அணி கைப்பற்றியுள்ள இதேவேளை இரண்டு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது போட்டி வரும் மூன்றாம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது .