மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி பலர் பலி

1 d 3
1 d 3

இத்தாலியில் அல்ப்ஸ் மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட இரண்டு பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி ப்ரெண்டா டோலமைட் மலைப் பகுதியில் 2,700 மீற்றர் (8,860 அடி) உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை 28 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டோலோமைட் மலைப்பகுதி பகுதியில் பனிச்சரிவு தாக்கியபோது, உயிரிழந்த நபர் மூன்று பேருடன் இருந்துள்ளார். இந்த சம்பவத்தில் சிக்கிய இரண்டாவது சறுக்கு வீரர் காயமடைந்து ட்ரெண்டோவில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், இத்தாலியில் அல்ப்ஸ் மலைத்தொடரில், ஆஸ்திரிய எல்லைக்கு அருகேயுள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது.

அங்கு ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிற 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்தனர். இவர்களே பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மூவரில் 2 பேர் சம்பவ இடத்திலேயும், ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளார்கள்.

மீட்புப் பணியில் 70 பேரை கொண்ட குழுவும், 3 ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று அதே இடத்தில் பனிச்சரிவில் சிக்கிய ஒரு தந்தையும், அவரது 11 வயது மகனும் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.