இந்தியாவிற்கு தலையிடி

GettyImages 916481204
GettyImages 916481204

இந்தியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அதிரடி துடுப்பாட்ட வீரரான டார்ஷி ஷோர்ட் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இத்தொடரில் விளையாடுவதற்கான அவுஸ்ரேலியா அணியில் இடம்பிடித்திருந்த சீன் அப்போட், காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக டார்ஷி ஷோர்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் ரி-20 லீக்கில் சீன் அப்போட் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதற்காக நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளார் இதனால் அப்போட் இந்தியா தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஜனவரி 14ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது