இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணிக்கு 129 ஓட்டங்கள்!

202012301607034344 Tamil News New Zealand Leapfrog Australia To Claim The ICC No1 Test SECVPF
202012301607034344 Tamil News New Zealand Leapfrog Australia To Claim The ICC No1 Test SECVPF

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காகத் துடுப்பாடி வரும் நியூசிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவுவரை விக்கெட் இழப்பின்றி 129 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காகத் துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 345 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.