இலங்கை கிரிக்கெட் அணியில் மஹேலவுக்கு புதிய பதவி!

mahela
mahela

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி அமுலாகும் வகையில், ஒரு வருடத்திற்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன செயற்பட உள்ளாரென ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இருபதுக்கு 20 தகுதிகாண்  சுற்றில், இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல செயற்பட்டிருந்தார்.

அத்துடன், பிரபல ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் அவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.