வலுவான நிலையில்அவுஸ்திரேலியா!

Capture 8
Capture 8

அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது .

ஆட்டநேர முடிவில், மார்னஸ் லபுசேன் 130 ஓட்டங்களுடனும், மெத்தியு வேட் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

சிட்னி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, சொற்ப ஓட்டங்களிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டேவிட் வோர்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 39 ஓட்டங்களை மாத்திரமே இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது, ஜோ பர்ன்ஸ் 18 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை வாக்னரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய மார்னஸ் லபுசேன் சிறப்பாக துடுப்பெடுத்தாட மறுமுனையிள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த வோர்னரும் 45 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 156 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர். இந்த இணைப்பாட்டத்தை கிராண்டோம் பிரிக்க ஸ்டீவ் ஸ்மித் 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு மார்னஸ் லபுசேன் மற்றும் மெத்தியு வேட் ஆகியோர் 32 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து களத்தில் இருக்க, இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதன்படி, இன்றைய ஆட்டநேர முடிவில் அவுஸ்ரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், கொலின் டி கிராண்டோம் 2 விக்கெட்டுகளையும், நெய்ல் வாக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.