வவுனியாவில் நீலங்களின் சமர் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்

IMG 20220301 122027
IMG 20220301 122027

நீலங்களின் சமர் முக்கோண கிரிக்கெட் தொடர் வவுனியாவில் ஆரம்பமானது. 

IMG 20220301 121853

குறித்த முக்கோண கிரிக்கட் தொடரினை ஐயனார் விளையாட்டு கழகம், தமிழ் யுனைடெட் கழகம், ஸ்ரார் பைட் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து நடத்துகின்றன. 

IMG 20220301 121932

இதன் முதல் போட்டி நகரசபை மைதானத்தில் ஐயனார் விளையாட்டு கழகத்திற்கும், தமிழ் யுனைடெட் கழகத்திற்கும் இடையில் நேற்று முன் தினம் இடம்பெற்றிருந்தது. 

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐயனார் விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது. 

50 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐயனார் விளையாட்டு கழகம் 31.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

IMG 20220301 121907

அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பே. அனோஜன் 29 பந்துகளிற்கு முகம்கொடுத்து 03 சிக்ஸ், 02 பவுன்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களையும், க. அனுசன் 03 சிக்ஸ் மற்றும் ஒரு பவுன்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 

137 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலகு வெற்றியுடன் களமிறங்கிய தமிழ் யுனைடெட் 22 ஓவர்களுக்கு மாத்திரம் முகம் கொடுத்து 103 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.