இலங்கை இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை

sl vs ind
sl vs ind

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது T20 கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு அணிகளும் முதல் சர்வதேச தொடரில் பங்கேற்பதனால் இத்தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராக அமைகிறது.

இந்த போட்டி தொடரில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ‌ஷிகர் தவான் அணிக்கு திரும்பி இருக்கிறார். ‌

முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 மாத இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகள் இதுவரை 16 இருபது ஓவர் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 11 ஆட்டத்திலும், இலங்கை அணி 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. இரு அணிகளும் இன்று சந்திப்பது 17-வது போட்டியாகும்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்தியா: விராட்கோலி (தலைவர்), ‌ஷிகர் தவான், லோகே‌‌ஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனி‌‌ஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ரி‌ஷாப் பண்ட், ‌ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, ‌‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, வா‌ஷிங்டன் சுந்தர்.

இலங்கை: மலிங்க (தலைவர்), குணதிலகா, அவி‌‌ஷ்கா பெர்னாண்டோ, மேத்யூஸ், தசுன் ‌‌ஷனகா, குசல் பெரேரா, நிரோ‌‌ஷன் டிக்வெல்லா, தனஞ்ஜெயா டி சில்வா, இசுரு உதனா, பானுகா ராஜபக்சே, ஒ‌ஷாடா பெர்னாண்டோ, வானிந்து ஹசரங்கா, லாஹிரு குமாரா, குசல் மென்டிஸ், சன்டகன், கசுன் ரஜிதா.