தென்னாபிரிக்காவின் போராட்ம் வீண் – இங்கிலாந்து வெற்றி

rsa vs eng
rsa vs eng

தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கேப் டவுனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்கிலாந்து அணி முதலாவது இன்னிங்சில் 269 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து சார்பில் பொப் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தென்னாபிரிக்க பந்துவீச்சில் ரபாடா 3 விக்கட்டுக்களையும், பிலாண்டர், நோர்டிச், பிரிட்டோரியஸ் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.

தென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் 223 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
அணி சார்பில் டீன் எல்கர் 88 ஓட்டங்களையும், டஸ்ன் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 391 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இந்கிலாந்து சார்பில் சிப்லி 133 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 72 ஓட்டங்களையும், அணித்தலைவர் ரூட் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க பந்துவீச்சில் நோர்டிச் 3 விக்கட்டுக்களையும், ரபாடா, மகாராஜ் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்திர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தடிய தென்னாபிரிக்க அணி 248 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுககளையும் இழந்து 248 ஓட்டங்களை மொத்திரமே பெற்று 189 ஓட்டங்கள் வித்தியயாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா சார்பில் மாலன் 84 ஓட்டங்களையும், டீ கொக் 50 ஒட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ 3 விக்கட்டுக்களையும், ஜேம்ஸ் அன்டர்சன், டென்லி தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்குமிடையிலான தொடர் 1-1 என சமனிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான அடுத்த போட்டி எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ளது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 223 ரன்களும் சேர்த்தன.