சமநிலையில் முடிவடைந்த ஆஷஷ் தொடர்

tim pain
tim pain

5 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் (ஆஷஸ்) தொடரில் இரு அணிகளும் 2-1 என அவுஸ்ரேலிய அணி முன்னிலை வகித்த நிலையில் இத்தொடரின் 5வது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பட்லர் 70 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.அவுஸ்ரேலிய அணி சார்பாக மிச்சேல் மார்ஷ் 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி தனது முதலாவது இன்னிங்சில் 225 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இங்கிலாந்து அணி சார்பாக ஆர்ச்சர் 6 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் இழந்து 329 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 399 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 263 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 135 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அவுஸ்ரேலிய அணி சார்பான மத்யூ வேட் 117 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஆர்ச்சர் தெரிவு செய்யப்பட்டார். தொடராட்டநாயகனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 2-2 இரு அணிகளும் சமப்படுத்தியுள்ளது.