ஜெயவர்தனாவின் உருக்கமான பதிவு!

0 VV
0 VV

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மகேலா ஜெயவர்தனா 25 வருடங்களுக்கு முன் இறந்த தனது சகோதரன் பற்றிய உணர்ச்சிபூர்வமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.

அவரது அன்பு சகோதரர் திஷால் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 16 வயதிலேயே சிகிச்சைகள் வெற்றிபெறாமல் இறந்துள்ளார் .

தனது மூத்த சகோதரனை போல, திஷால் இளம் வயதிலே இடது கை பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடி வந்தார். சகோதரன் என்பதை தாண்டி கிரிக்கெட் வாழ்க்கையில் மகேலாவிற்கு நல்ல தோழமையாக இருந்து வந்தார்.

மகேலாவைப் பொறுத்தவரை, திஷால் அவரை விட சிறந்த வீரர் ஆவார்.

அவருடைய நினைவாகவே மகேலா அடிக்கடி புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கான நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட, கராபிட்டியாவில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக பாயிண்ட் பருத்தித்துறை முதல் டோண்ட்ரா ஹெட் வரை நடைப்பயணத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் திஷால் ஜெயவர்தனாவின் 25 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மகேலாவும் அவரது குடும்பத்தினரும் மத சடங்குகளை செய்தனர்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “நான் எனது சகோதரனை இழந்து 25 வருடங்கள் ஆகின்றன. இந்த ஆண்டுகளில் எனது பெற்றோர் எனக்கு மிகவும் வலிமையாக இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.