சொந்த மண்ணில் விளையாடவுள்ள இலங்கை அணி

2 d 1
2 d 1

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி 19ஆம் திகதியும், இரண்டாவது போட்டி 27ஆம் திகதியும் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட நட்சத்திர வீரர் குசல் பெரோரா அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே சமயம் ஜனவரியில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சோபிக்க தவறிய லஹிரு திரிமன்னே அணியில் சேர்க்கப்படவில்லை.

இலங்கை அணி விபரம் வருமாறு,

திமுத் கருணாரத்ன (தலைவர்), ஓசத பெர்னாண்டோ,

குசல் மெண்டீஸ், ஏஞ்சலோ மேத்தியூஸ், தினஷே் சந்திமல், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டிசில்வா ,நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, கசூன ராஜித, தில்றுவன் பெரேரா, லசித் எம்புலுதெனிய, லக்ஷான் சந்தகான், வனிந்து ஹசரங்க.