இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சஜித் பத்திரன நியமனம்!

sajith pathirana 1
sajith pathirana 1

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான சஜித் பத்திரன இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முனனர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் குறித்த பதவிக்கான நேர்முகப்பரீட்சை நடத்தியிருந்ததுடன் சஜித் பத்திரன மற்றும் முன்னாள் இலங்கை அணி வீரரான சஜீவ வீரக்கோன் ஆகிய இருவரும் குறித்த பதவிக்காக போட்டியிருந்தனர்.

இந்த நிலையில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் சுழல் பந்துவீச்சுப் பயிற்றுனராக சஜித் பத்திரனவை நியமிப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய சகலதுறை வீரரான சஜித் பத்திரன, இலங்கை அணிக்காக இதுவரை 18 ஒருநாள் போட்டிகளிலும், 5 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.