ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி புறப்பட்டார் மஹேல ஜெயவர்தன

post image 3c56e04
post image 3c56e04

இந்த ஆண்டு டுபாயில் நடைபெறவுள்ள 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நோக்கி புறப்பட்டுள்ளார்.

நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மஹேல ஜெயவர்தன தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுவது இது மூன்றாவது சந்தர்ப்பமாகும்.

மஹலேவின் பயிற்சியின் கீழ் மும்மை இந்தியன் அணி இதுவரை இரண்டு முறை சம்பியன் ஆகியுள்ளது.

ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நம்வர் 08 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.