இங்கிலாந்து மகளிர் அணி 47 ஓட்டங்களினால் வெற்றி!

download 13
download 13

மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 47 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் குறித்த தொடரில் இங்கிலாந்து அணி 2க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.