இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்த நியூசிலாந்து

santner
santner

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற 2வது T20I போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்திற்கு பதிலடி கொடுத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக ஜிமி நீஷம் 42 ஓட்டங்களையும், மார்டின் குப்தில் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஜோர்டான் 03 விக்கட்டுக்களையும், சாம் ஹரன் 02 விக்கட்டுக்களையும், மஹ்மூத், அடில் ரஷீட், கிரஹரி தலா ஒரு விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 155 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இங்கிலாந்து சார்பாக மாலன் 39 ஓட்டங்களையும், ஜோர்டான் 36 ஓட்டங்களையும் அணித்தலைவர் மோர்கள் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மிட்சல் சான்ட்னர் 3 விக்கட்டுக்களையும், அணித்தலைவர் ரிம் சௌதி, பெர்குசன், இஷ் சோதி தலா ஒருவிக்கட்டினை வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக மிட்சல் சான்ட்னர் தெரிவு செய்யப்பட்டார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடர் தற்போது 1-1 என சமநிலை பெற்றுள்ளது.

அடுத்த போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.