ஹைதராபாத் அணியிடம் சரணடைந்தது பஞ்சாப்!

fotojet 2 jpg
fotojet 2 jpg

நடப்பு ஆண்டுக்கான IPL தொடரின் நேற்றைய போட்டியில் டேவிட் வோனர் தலைமையிலான Sunrisers Hyderabad அணி 69 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

13 PL தொடரின் 22 ஆவது போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் Sunrisers Hyderabad மற்றும் Kings XI Punjab ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Sunrisers Hyderabad அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த Sunrisers Hyderabad அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Sunrisers Hyderabad அணி சார்பாக ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி 97 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கத்தோடு அணித்தலைவர் டேவிட் வோனர் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர் .

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Kings XI Punjab அணி 16 தசம் 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபட்சமாக, நிக்கோலஸ் பூரன்77 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கத்தோடு KLராகுல் 11 ஓட்டங்களை பெற்று க்கொடுத்தனர்

இதேவேளை, இந்தப் போட்டியின் சிறந்த வீரராக Sunrisers Hyderabad அணிக்காக 97 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த ஜானி பேர்ஸ்டோவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.