டெல்லியிடம் மண்டியிட்டது ராஜத்தான் அணி !

D2cbjRrUwAYjqKO
D2cbjRrUwAYjqKO

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி 46 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 23 ஆவது போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு 7.30 இற்கு ஆரம்பமானது.

இந்தப் போட்டியில்டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராஜத்தான் றோயல் ஆகிய அணிகள் பலபரீட்சை நடாத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜத்தான் றோயல் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

185 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜத்தான் றோயல் அணி 19 ஆவது ஓவரில் 04 பந்துகள் வீசப்பட்ட நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது,

இதன் ​போது டெல்லி அணி சார்பில் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியின் நாயகனாக தெரிவானார்.

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் தரவரிசைப்பட்டியலில் டெல்லி அணி அணி முதலாவது இடத்திலும் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது