இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் மோதல்!

3 5
3 5

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 29ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

டுபாயில் இன்று (13) நடைபெறவுள்ள இப்போட்டியில், சென்னை அணிக்கு டோனியும், ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும் தலைமை தாங்கவுள்ளனர். இரு அணிகளும் முன்னதாக இதுவரை 13 முறை மோதியுள்ளன. இதில் 9 முறை சென்னை அணியும் 4 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை சென்னை அணி ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி, ஐந்தில் தோல்வி என 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி ஏழு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி, நான்கில் தோல்வி என 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

நடப்பு தொடரில் முன்னதாக இரு அணிகளும் மோதிய போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.