ஆப்கானிய படையினர் நடத்திய தாக்குதல்களில் தலிபான் போராளிகள் 28 பேர் பலி!

download 4 1
download 4 1

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களில் தலிபான் போராளிகள் 28 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் தலிபான் போராளிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது.

அதன் பயனாக தலிபான்கள் – ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான்போராளிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

தலிபான்களின் தாக்குதல்களுக்கு உள்நாட்டு இராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் காந்தகார் மாகாணத்தின் டியன், மரோப் மற்றும் சஹ்ரி மாவட்டங்களிலும் உர்கன் மாகாணத்தின் டெஹ் ரவோட் மாவட்டத்திலும் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் நேற்று இரவு அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் தலிபான் போராளிகள் 28 பேர் கொல்லப்பட்டனர்.