அனு ஆயுத பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

koria vs usa
koria vs usa

அணுஆயுத விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா தனது விரோதப்போக்கை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.

இது குறித்து வடகொரியா ஆசிய பசிபிக் அமைதி குழுவின் தலைவர் கிம் யாங் ஜோல் கூறுகையில்,

‘‘கூட்டு போர் பயிற்சியை ஒத்திவைப்பது என்பது பொருத்தமற்றதாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டு போர் பயிற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் அல்லது ஒருமுறையாவது நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்துவதால் கொரிய தீபகற்பத்தில் அமைதியும், பாதுகாப்பும் ஏற்படாது. மேலும் இது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயலும் தூதரக நடவடிக்கைகளுக்கு உதவாது. தனது விரோதப்போக்கு கொள்கையை முற்றிலுமாக கைவிடாமல் அணுஆயுத பேச்சுவார்த்தை நடத்திவிடலாம் என அமெரிக்கா கனவு காணக்கூடாது. வடகொரியா அதற்கு வாய்ப்பு அளிக்காது’’ என தெரிவித்துள்ளார்.