போலி வாகன ஓட்டுநர் உரிமம்- தமிழர்களிற்கு சிக்கல்

french police
french police

பிரான்சில் வாகன ஓட்டுனர் உரிமத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொடுத்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக ஓட்டுனர் உரிமத்தினை பெற்றுக் கொண்டவர்களில் சில தமிழர்களும் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் ஊடாக சாரதி உரிமத்தினை சட்டதுக்குப் புறம்பாக முறையற்று பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் புலனாய்வுத்தகவல்களை காவல்துறையினர் தமது விசாரணை மூலம் வெளிக்கொண்டுவர இருப்பதோடு, 2020ம் ஆண்டு இவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர். 10 ஆண்டு சிறைத்தண்டனை உட்பட 1 மில்லியன் தண்டம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.