ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக ட்ரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

trump biden
trump biden

உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

எனினும் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளதாக ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வந்தார்.

அந்தவகையில் ஜனாதிபதித் தேர்தல் டெக்ஸாஸ் மாகாணத்தில் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடுத்த வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து அம்மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் கென் பாக்ஸ்டன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

முன்னதாக பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட பகுதிகளில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்தும் ட்ரம்ப் தொடுத்த வழக்குகள் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.