ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்; 3 பேர் பலி!

blast 2
blast 2

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடக்கு பகுதியில் இன்று ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதேபோல கிழக்கு காபூலில் அரச சட்டத்தரணி ஒருவர் அலுவலகத்துக்கு சென்றபோது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.