சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: நியூயோர்க் அரசாங்கம்!

1206948913.jpg.0 720x450 1
1206948913.jpg.0 720x450 1

தமது பிராந்தியத்துக்குள் நுழையும் சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென நியூயோர்க் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதியவகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியினைத் தொடர்ந்து குறித்த கட்டுப்பாட்டினை நியூயோர்க் மாகாணம் விதித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக நியூயோர்க் மாகாண மேயர் பில் டி பிளேசியோ கருத்து தெரிவிக்கையில், ‘தமது பிராந்தியத்துக்குள் நுழையும் பயணிகள் பயண விபரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், தமது பிராந்தியத்துக்குள் வரும் பயணிகள் குறிக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தமது மாநிலத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கான உறுதியளித்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு நாளொன்றுக்கு நூறு டொலர்களை அபராதம் விதிக்கப்படுமென பிளேசியோ தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்டையில், இதுவரை அமெரிக்காவில் 18.4 மில்லியன் மக்கள் கொரோனா வைரசுக்கு இலக்காகியுள்ளனர். மேலும் மூன்று இலட்சத்து 26 ஆயிரம் பேர் குறித்த வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.