உளவு பார்த்தமைக்காக 19 ஆண்டுகள் சிறை

shing lee
shing lee

அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஜெர்ரி சுன் ‌ஷிங் லீ சீனாவிற்காக உளவு வேலை பார்த்தமைக்காக அமெரிக்க நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அமெரிக்காவின் சில முக்கிய இராணுவ இரகசிய தகவல்களை பெறுவதற்காக சீனா தரப்பில் பேரம் பேசப்பட்டு அவரது வங்கிக்கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமையினை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது,

இது தொடர்பிலான வழக்கு விசாரணையின் போது தன் மீதான குற்றச்சாட்டுகளை லீ ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து நீதிமன்றம் ஜெர்ரி சுன் ‌ஷிங் லீயிற்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.