சந்திராயனை நிலவில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

Tamil News large 2359311
Tamil News large 2359311

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரமின் நிலவு சுற்றுவட்டப்பாதை, இன்று காலை இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து லேண்டர் விக்ரமை நிலவில் தரையிறக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம், ஆக.,20 ம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதன் தொடர்ச்சியாக செப், 02 ம் திகதி, விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் தனியாக பிரிக்கப்பட்டு, அதன் நிலவு சுற்றுவட்டப்பாதை செப்.,03 அன்று குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு லேண்டரின் சுற்றுப்பாதை 2வது முறையாக மேலும் குறைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

9 விநாடிகளுக்கு எஞ்சின் இயக்கப்பட்டு, இப்பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது லேண்டர் விக்ரம், குறைந்தபட்சமாக 35 கி.மீ.,லும், அதிகபட்சமாக 101 கி.மீ.,தொலைவில் இயங்கி வருகிறது. செப்,7 ம் திகதி நள்ளிரவு 1.40 முதல் 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.