சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே

uththav thakre
uththav thakre

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் பதவி ஏற்றுள்ள நிலையில் எதிர்வரும் 3ம் திகதியிற்குள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுமாறு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று நடைபெற்ற மகாராஷ்டிர மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது.

பெரும்பான்மைக்கு 145 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன.