பிரியங்கா கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு

priyanga reddi murder
priyanga reddi murder

இந்தியாவின் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் விரைவில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேசமாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், இவ்வழக்கினை விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைத்து தெலுங்கானா மாநில அரசு மகபூப்நகர் மாவட்ட நீதிபதி தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.