இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 இலட்சத்தை நெருங்கியது

202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1
202009302144455709 Various Side Effects in Patients Cured of Corona Infection SECVPF 1

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டோரின் எண்ணிக்கை 110 இலட்சத்தை நெருங்கியது 106 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத் தமாக 109 இலட்சத்து 50 ஆயிரத்து 201 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 106 இலட்சத்து 56  ஆயிரத்து 845 பேர் குணமடைந்துள்ளனர், 1 இலட்சத்து 37 ஆயிரத்து 342 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,56,014 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.