அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 10 ஆயிரத்து 736 ஆக உயர்வு!

influenza virus
influenza virus

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 இலட்சத்து 8 ஆயிரத்து 85 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 30 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 651 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 10 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,406 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 ஆயிரத்து 171 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.