அமீரகத்தில் ஒரே நாளில் 2,138 பேர் குணமடைவு!

1595510689 corona outbreak 2
1595510689 corona outbreak 2

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 இலட்சத்து 54 ஆயிரத்து 944 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,988 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 74 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 138 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அமீரகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 58 ஆயிரத்து 885 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 13 ஆயிரத்து 735 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

தொடர்ந்து சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.