பிரேஸிலை விட இந்தியாவில் அதிகமானோருக்கு கொரோனா

6fb94159168c0828019786e5e935663a XL
6fb94159168c0828019786e5e935663a XL

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 168,912 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையின் மூலமாக கொரோனா வைரஸ் அதிகளவாக பதிவான நாடுகளின் பட்டியலில் பிரேஸிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

தரவுகளின்படி இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13.53 மில்லியனை எட்டியுள்ளது, பிரேஸிஸல் 13.45 மில்லியன் கொரோனா நோயாளர்களை கொண்டுள்ளது.

அதேநேரம் 31.2 மில்லியன் நோயாளர்களை கொண்டுள்ள அமெரிக்கா உலகில் அதிகளவான கொரோனா நோயாளர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்றைய தினம் 904 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதுடன், கொரோனா பதிப்பினால் இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 170,179 ஆக உள்ளது.

தற்போது வரை இந்தியாவில் 10,43,65,035 பேர் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டும் உள்ளது.

மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.