டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம்

5 ffd
5 ffd

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம்  நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்ற விசாரணைக் குழு அனுமதி அளித்துள்ளது.

தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் காங்கிரஸ் அவையை அவமதித்தல் போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு இரு அவைகளிலும் விவாதித்து டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற  நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் 40 வாக்குகளை ஆதரவாக அளித்துள்ளனர்.

இதன் அடுத்தகட்டமாக சம்பிரதாய அனுமதியைக் கோரி செனட் சபைக்கு இது அனுப்பி வைக்கப்பட்டு அங்கும் அனுமதி பெறப்படும். அதன்பின் அப்பிரேரணைக்கு இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கண்டன தீர்மானம் வெற்றி பெறும்பட்சத்தில் டிரம்பின் பதவி பறிபோகும்.

இதுபோன்று நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ளும் மூன்றாவது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என தெரிவிக்கப்படுகின்றது.