பாகிஸ்தான் விருந்தகம் ஒன்றில் குண்டுத் தாக்குதல் ; 4 பேர் பலி

202011250554256052 15yearold girl dead 5 hurt in fire caused by cylinder SECVPF
202011250554256052 15yearold girl dead 5 hurt in fire caused by cylinder SECVPF

பாகிஸ்தானின் குவெட்டா (Quetta) நகர் பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதோடு 12 பேர் காயமடைந்தனர்.

விருந்தகத்தின் வாகன தரப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கான சீனத்தூதுவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியான குவெட்டாவில் இருந்ததாக நம்பப்படுகின்றது.

எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பத்தில் சீனத் தூதுவர் வேறு ஒரு நிகழ்வில் இருந்ததாகவும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருக்கவில்லை எனவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

எனினும் இதற்காக தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.