டெல்லி போராட்டம்- கைதான 50 மாணவர்கள் விடுதலை

delli
delli

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிஸார் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கலவரத்தை தூண்டிவிட்டதாகவும் தெரிவித்து 50 மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிடிபட்ட மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் காயமடைந்த மாணவர்களை தரமான மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் டெல்லி சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கைதான 50 மாணவர்கள் விடுவிக்கப்பட்டதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.