மெட்ரோ புகையிரத பாலம் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி

21 6090f60f51962
21 6090f60f51962

மெக்ஸிகோ நாட்டின் மெக்ஸிகோ நகரில் நேற்று (03) இரவு தொடருந்து மேம்பாலம் ஒன்று மெட்ரோ தொடருந்துடன் இடிந்து விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த இடிபாடுகளின் கீழ் பல வாகனங்கள் சிக்கியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.