இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

big 165616 Coronavirus
big 165616 Coronavirus

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

தினசரி நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 4 லட்சத்தை தாண்டி விட்டது.

உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த் தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று (06) காலை இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

இந்த தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,077,766 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 412,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 3,982 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 230,170 ஆக உயர்ந்துள்ளது.