கர்நாடகா மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு

curfew 1
curfew 1

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அங்கு நாளாந்தம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகின்றமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 24 ஆம் திகதி காலை 6 மணிவரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் திறப்பதற்கு கர்நாடகா அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அத்துடன் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்பற்ற, வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், விடுதிகள், மதுபானசாலைகள் என்பவற்றை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்னர் திட்டமிட்டப்பட்ட விமானங்கள் மற்றும் தொடருந்து சேவைகள் என்பன ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் செயற்படும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.