மலேசியா உச்சிமாநாட்டில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள்

479
479

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளின் நான்கு நாள் உச்சி மாநாடொன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த மாநாட்டில் குறிப்பாக உலகளாவிய முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.

மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் மற்றும் கட்டார் எமீர் ஷெய்க் தமிம் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

இதில் 52 நாடுகளின் 250 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட புத்திஜீவிகள் பலரும் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்தோனேசியா, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க வில்லையெனவும் கூறப்படுகின்றது.