பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்றம் அனுமதி

boris johnson 1
boris johnson 1

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வெளியேறுவது குறித்த பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பிரக்ஸிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்துள்ளது.

பிரித்தானியாவில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 337 இடங்களில், அதிக பெரும்பான்மையுடன் அமோக வெற்றிபெற்றிருந்தது.

இதனடையடுத்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், அரசாங்கம் பிரெக்சிட்டை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய உத்தரவை பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் உடன்படிக்கையை சில திருத்தங்களுடன், நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு ஆதரவாக 358 வாக்குகளும், எதிராக 234 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த மசோதா 2020ம் ஆண்டு ஜனவரியில், மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இதைத் தொடர்ந்து, 2020 ஜனவரி 3ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா முறைப்படி வெளியேறும் என தகவல் வெளியாகியுள்ளது.