மூன்று விண்வெளி வீரர்களை சீனா விண்ணுக்கு அனுப்பியது!

1623919875 6704749 hirunews
1623919875 6704749 hirunews

புதிய விண்வெளி மையத்தை அமைக்க சீனா மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது. குறித்த மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380 கிலோமீற்றர் தூரத்தில் டியான்ஹே மாட்யூலில் தங்கவுள்ளனர்.

சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து வருடங்களுக்கு பின்னர் இதுவே முதற்தடவையாகும்.

விண்வெளி தொடர்பான சீனாவின் முயற்சியின் புதிய திட்டமாக விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களில் சீனா சந்திரனின் மேற்பரப்பில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்துள்ளது. அத்துடன் செவ்வாய் கிரகத்தில் 6 ரோபோக்களையும் தரையிறக்கியுள்ளது.

இந்தநிலையில் மூன்று விண்வெளி வீரர்களுடன் ஷென்ஜோ-12 ரக ஓடம் சீன நேரப்படி இன்று முற்பகல் 09.22 அளவில் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.