ஈரான் ஆயுதக்குழுவினருக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

202106281015500192 US Strikes Near SyriaIraq Border Kill 5 Militia Fighters SECVPF
202106281015500192 US Strikes Near SyriaIraq Border Kill 5 Militia Fighters SECVPF

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக்குழுவினருக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்காவின் இராணுவ மையமான பெண்டகன் அறிவித்துள்ளது.

அமெரிக்க படைகள் மீது, ஆயுததாரிகள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தரப்பினரை பாதுகாப்பதற்காக தான் செயற்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெளிவுபடுத்தியுள்ளதாக பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர், ஈரான் ஆயுததாரிகளுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது வான்வழித் தாக்குதல் இதுவாகும்.

ஈராக்கை தளமாகக் கொண்ட அமெரிக்க படைகள், கடந்த மாதங்களாக, பல முறை ஆளில்லா விமான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.

எனினும், ஈரான் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது