பூமியில் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட தூரம் கணிப்பு!!

world largest walk
world largest walk

பூமியில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய ஒற்றை தூரம் எவ்வளவு என்பதை கூகுள் வரைபடம் மூலம் கணித்து சுவாரஸ்யமான பொறியியல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தென் ஆப்பிரிக்க நாட்டின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசில் இருந்து வடக்கு ரஷ்யாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்லக்கூடியதாகும்.

மொத்தம் 14 ஆயிரம் மைல்கள் உடைய இந்த தூரத்தை கடக்க 3 ஆண்டுகள் ஆகும்.

இந்த பயணத்தின் போது எந்த நிலையிலும் ஒரு ஆற்றின் குறுக்கே செல்ல ஒரு சிறிய படகையும் கூட நாம் பயன்படுத்த வேண்டியதில்லை, ஏனென்றால் முழு வழியும் பாலங்களைக் கொண்ட சாலைகளால் ஆனது.

இந்த பயணத்தின்போது பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு, உயிர் பிழைப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து செல்ல வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.